ஈரான் உடனான போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை 114 டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சீனாவிற்காக காத்திருக்கும் 10 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா வாங்கிக்கொள்ளுமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது சுமார் 100 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமான ரஷ்ய கச்சா எண்ணெய், சீன துறைமுகங்களில் இறக்குமதி செய்ய இடமில்லாமல் கடலிலேயே கப்பல்களில் காத்திருக்கின்றன. சீனாவில் இந்த எண்ணெயை இறக்க இன்னும் 6 வாரங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த எண்ணெயை இந்தியா வாங்கினால், சந்தையில் நிலவும் எண்ணெய் தட்டுப்பாடு குறித்த அச்சத்தையும், விலை உயர்வையும் கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்காவின் எரிசக்தித் துறைச் செயலர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.
















