உத்தரகாண்ட் மாநிலத்தின் மிக உயரமான அணையான தெஹ்ரி அணையின் நீர்த்தேக்கப் பகுதியில், இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து தங்களது போர்த்திறனை வெளிப்படுத்தும் பிரம்மாண்டமான கூட்டுப் பயிற்சியை வெற்றிகரமாக நடத்தினர்.
இந்திய விமானப்படையின் சக்திவாய்ந்த C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானம் மூலம் பயணித்த வீரர்கள், மிக அதிக உயரத்தில் இருந்து வரிசையாக ஒருவர் பின் ஒருவராக பாராசூட் மூலம் குதித்து, எதிரியின் இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் வகையில் பயிற்சியை மேற்கொண்டனர்.
மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை ஊடுருவல் பாதைகளாகப் பயன்படுத்தி, எதிரி முகாம்களை தாக்கும் யுக்திகளை சிறப்பு படை வீரர்கள் செய்து காட்டினர்.
















