எரிவாயு சிலிண்டர் பிரச்னை காரணமாக உணவு பட்டியலை குறைப்பதாக கோவையில் உள்ள தனியார் உணவகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தனியார் உணவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவகத் துறையில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எரிபொருள் தட்டுப்பாட்டால் தினசரி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவைகள் முழுமையாக நிறுத்தப்படாமல் உணவு பட்டியல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சில உணவுப் பொருட்களின் கிடைக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும், சீரான எரிவாயு வழங்கலை மீட்டெடுக்க அரசுடன் தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சூழ்நிலையை புரிந்து கொண்டு தொடர்ந்து ஆதரவளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு தனியார் உணவகம் நன்றி தெரிவித்துள்ளது.
















