டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் பரிசு வழங்கும் விழாவில், போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் முதல் நபராக கௌரவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டியின்போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்கவில்லை. இது முக்கிய விவாதப்பொருளானது. இந்த விவகாரத்தில் நடுவராக இருந்த ஆண்டி பைகிராஃப்ட் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஐசிசி-யிடம் வலியுறுத்தியது.
பைகிராஃப்ட்டை நீக்காவிட்டால் அடுத்த போட்டியை புறக்கணிக்கப்போவதாக மிரட்டிய பாகிஸ்தான், ஆட்டத்தின் நேரத்தையும் தாமதப்படுத்தியது. ஆனால், ஐசிசி அவர்களின் கோரிக்கையை நிராகரித்து பைகிராஃப்ட்டையே பணியில் தொடரச் செய்தது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து வீரர்கள் மேடைக்கு அழைக்கப்படுவதற்கு முன்பே, போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் முதல் நபராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மறைமுகப் பதிலடியாகவும், பைகிராஃப்ட்டின் நேர்மைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது.
















