கோவையில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்க வலியுறுத்தி கோவை சிவானந்தா காலனியில் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இந்நிலையில், ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
















