ஈரான் போர் எதிரொலியாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என கருதப்படுவதால் மதுரையில் இயற்கை ராக்கெட் அடுப்புகளுக்கான மவுசு அதிகரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சர்வதேச எரிபொருள் விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டு நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.
அந்த வகையில் மதுரையில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டம் வைகை தென்கரை சாலையில் அமைந்துள்ள இயற்கை அடுப்பு கடையில் ராக்கெட் அடுப்பை வாங்க ஹோட்டல் உரிமையாளர்கள் குவிந்து வருகிறார்கள்.
இந்த அடுப்புகள் 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விறகு அடுப்புகளுடன் ஒப்பிடும்போது இந்த அடுப்புகள் 80 சதவீதம் புகை குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கேஸ் அடுப்புடன் ஒப்பிடும்போது பாதுகாப்பானதாக இருப்பதுடன் செலவும் குறையும் என கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
















