செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை காரில் கடத்தி, கத்தி முனையில் 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த இருங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வரும் நிலையில், கடந்த 3ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை மர்மநபர்கள் காரில் கடத்தி 16 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
அவரது தாய்க்கு போன் மூலம் மிரட்டல் விடுத்து 6 சவரன் நகையை பறித்த மர்மநபர்கள், முனிகிருஷ்ணனை விட்டு விட்டு காரில் தப்பியோடினர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் அசோக்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், முனிகிருஷ்ணனின் உறவினரான சுந்தர்ராஜன் என்பவர் 2 சிறுவர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 19 சவரன் நகை, கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
















