தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்று கொண்டார்.
தமிழகத்தின் ஆளுநராக செயல்பட்டு வந்த ஆர்.என்.ரவி மேற்குவங்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், கேரள ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வருகை தந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, முதலமைச்சர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனை தொடர்ந்து, மக்கள் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்று கொண்டார்.
அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















