மதுரை அருகே நீதிமன்றம் அனுமதி அளித்தும் கோயில் கட்ட இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கோயில் கட்டி முடிக்கும் வரை பாதுகாப்பு வழங்க கோரி ஊர்மக்கள் மனு அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோயில் மற்றும் கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள மதுரை உயர் நீதிமன்ற அமர்வு அனுமதி அளித்துள்ளது. ஆனால், அப்பகுதி இஸ்லாமியர்கள் கோயில் திருப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கோயில் பரம்பரை அறங்காவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேகம் நடத்தும் வரை காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதுரை எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளனர்.
















