ஈரான் உடனான போரில் வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 11 நாட்களில் அமெரிக்க ராணுவம் ஈரானை ஏறக்குறைய அழித்துவிட்டது என்றும், ஈரான் ஒரு கடினமாக நாடு எனவும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் விமானப்படை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை 90 சதவீதம் அழித்ததாகவும் கூறினார்.
ஈரானிடம் தற்போது அணுசக்தி திறன் இல்லை எனக்கூறிய அவர், ‘மிட்நைட் ஹேமர்’ நடவடிக்கைக்குப் பிறகு அமெரிக்க அங்கிருந்து வெளியேறியதாக தெரிவித்தார்.
ஆனால், ஈரான் மீண்டும் தாக்குதலை தொடங்கியதால், பதில் தாக்குதல் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஈரான் போரால் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகம் தடையின்றி கிடைக்கும் பணியில் அமெரிக்க நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகின் பல்வேறு நாடுகளின் பெட்ரோலியக் கிடங்குகளிலிருந்து இதுவரை இல்லாத அளவாக 400 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் விடுவிப்பதை சர்வதேச எரிசக்தி முகமை ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.
















