தமிழ்நாட்டில் இருப்பதும், தமிழக மக்களை பார்ப்பதும் பெருமையாக உள்ளதாக, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார்.
தமிழ்நாடு புதிய ஆளுநராக பொறுப்பேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு பாரம்பரியமிக்க மாநிலம் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் தான் இருப்பதும், தமிழக மக்களை பார்ப்பதும் பெருமையாக உள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் நமது கலாசாரமும், பாரம்பரியமும் ஆழமாக வேரூன்றி உள்ளதோடு, பாதுகாக்கப்பட்டும் வருவதாகவும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தெய்வங்கள் எப்போதும் துணைநிற்கும் என்றும் ஆளுநர் கூறினார்.
















