மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு தமிழ் புலவர் கம்பர் பெயரை வைக்க வேண்டுமென பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மணக்குடி கிராமத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் 24 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதனை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இதனிடையே பேருந்து நிலையத்திற்கு கவி சக்கரவர்த்தி கம்பர் பெயரை சூட்ட வலியுறுத்தி மயிலாடுதுறையில் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
















