தமிகத்தில் பதிவான கொலை வழக்கு விவரங்களை தமிழக உள்துறை செயலாளர் திரித்து கூறுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், நேற்று, தமிழக உள்துறைச் செயலாளர் சந்திப்பு நடத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் குறித்து உள்துறைச் செயலாளர் வெளியிட்ட புள்ளிவிவரங்களை நம்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கான காரணம் 2021 ஆம் ஆண்டில் NCRB (தேசிய குற்ற ஆவணக் காப்பகம்) அறிக்கையின்படி பதிவான கொலை வழக்குகளின் எண்ணிக்கை 1686 ஆகும்; ஆனால், 2021-இல் தமிழகத்தில் பதிவான கொலை வழக்குகளின் எண்ணிக்கை 1597 மட்டுமே என்று உள்துறைச் செயலாளர் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2021-ஆம் ஆண்டில் தமிழக அரசே சமர்ப்பித்து, ஏற்கனவே வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களையே உங்களால் திரித்து வெளியிட முடிகிறது என்றால், இதுவரை வெளியிடாமல் நீங்கள் மறைத்து வைத்திருந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை வேறு யார் தான் நம்புவார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகளுக்குப் பொறுப்பான முதலமைச்சர், ஏன் அதிகாரிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார்? என்றும் அண்ணாமலை வினவியுள்ளார்.
















