மத்திய இணை அமைச்சர் L.முருகன் மற்றும் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர்
இது குறித்து நயினார் வெளியிட்ட பதிவில் இன்றைய தினம் மத்திய இணை அமைச்சர் L.முருகனுடன் திருமலை திருப்பதியில் அருள்மிகு ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமானை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது என தெரிவித்தார்
அந்த புனிதமான பயணத்தின் போது தக்ஷிணாம்நாய ஸ்ரீ ஸ்ரிங்கேரி சாரதா பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கராச்சார்யர் ஸ்ரீ ஸ்ரீ விதுஷேகர பாரதி மஹாசுவாமிகளை நேரில் சந்தித்து அவர்களின் அருளாசிகளைப் பெறும் வாய்ப்பும் கிடைத்தது எனக் கூறினார்
மேலும், பாரத நாட்டின் மக்கள் அனைவரும் எல்லா வளங்களுடனும் நலமுடன் இன்புற்று வாழ வேண்டும் என்று திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமானை மனமாரப் பிரார்த்தித்தேன் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
















