சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுப்பேட்டை சேர்ந்த மாணிக்கம் என்ற முதியவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் முதியவர் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார். படுகாயமடைந்த நபர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















