இந்தியாவில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா, உள்நாட்டு LPG கேஸ் உற்பத்தி மார்ச் 5-ம் தேதியுடன் ஒப்பிடும்போது தற்போது 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குத் தடையில்லாத சிலிண்டர் விநியோகத்தை அரசு உறுதி செய்துள்ளதாகவும். வணிக ரீதியான LPG சிலிண்டர்களை முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்…
எரிபொருள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளதாக கூறிய சுஜாதா ஷர்மா, 258 மில்லியன் மெட்ரிக் டன் சுத்திகரிப்புத் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையங்கள் தற்போது 100 சதவீதத்திற்கும் அதிகமான கொள்ளளவில் இயங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே இல்லை எனவும் உறுதிபட தெரிவித்தார். .
போருக்கு முன்பு 55.7 லட்சமாக இருந்த LPG முன்பதிவுகள் நேற்று வரை 75.7 லட்சமாக உயர்ந்துள்ளது எனவும்.எரிவாயு கிடைக்காது என்று மக்களிடம் நிலவும் அச்சமே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டார்.
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என விளக்கம் அளித்துள்ள சுதாதா ஷர்மா, வதந்திகளை நம்பி தேவையின்றி சிலிண்டர்களை முன்பதிவு செய்வதை தவிர்க்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
















