தூத்துக்குடியில் மற்றொரு நிர்பயா சம்பவம் நடத்துள்ளதைக் கண்டித்து மதுரையில் அதிமுகவினர் தூத்துக்குடி நிர்பயா என்று வாயில் கருப்புக் துணி கட்டி நீதி வேண்டி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 17 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் வண்டியூர் தெப்பக்குளம் அருகே அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன் தலைமையில் தூத்துக்குடி நிர்பயா என்ற வாசகம் எழுதிய கருப்பு கொடியை வாயில் கட்டி, கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
கருப்புத் துணியில் தூத்துக்குடியில் இறந்த நிர்பயாவிற்கு கண்ணீர் அஞ்சலி என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
















