தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார்.
டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23- ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுவதாக கூறினார்.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது என்றும் வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6-ந் தேதி முடிகிறது என்றும் தெரிவித்தார்.
வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல்7-ந் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் ஏப்ரல் 9-ந் தேதி என்றும் கூறினார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி என்றும் ஞானேஷ்குமார் அறிவித்தார்.
















