நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை கூடுதல் செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் சிலிண்டர் பதுக்கல் குறித்து 12 ஆயிரம் இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் பதுக்கல் சிலிண்டர்களை பறிமுதல் செய்ததாகவும் அவர் கூறினார். மேலும் எண்ணெய் நிறுவனங்கள், எல்பிஜி விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களிலும் சோதனை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
















