போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பி இந்தியா உதவியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்துக்கு உடன்பட மறுத்த ஈரானின் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரானில் 1300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் முதற்கட்டமாக ஈரானுக்கு மருத்துவ பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. அவற்றை ஈரானிய செஞ்சிலுவை சங்கம் பெற்றுக்கொண்டதாக இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
















