உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மழைநீர் சேமிப்பு மிகவும் அவசியமான ஒன்று என தெரிவித்தார்.
எனவே மழைநீர் சேமிப்பு குறித்து வரும் 22 ஆம் தேதி வான் அமிர்தம் என்ற தலைப்பில் திருச்சி SRM மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெறும் என அவர் கூறினார். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தொலைபேசி மற்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
















