ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, எல்பிஜி கேஸ் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தியதாக கத்தார் அறிவித்துள்ளது.
கத்தாரில் செயல்பட்டு வந்த உலகின் மிகப்பெரிய எல்பிஜி கேஸ் உற்பத்தி ஆலையான ராஸ் லாஃபான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதனால் ஆலையில் ஏற்பட்ட பெரும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கத்தாரின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி உள்கட்டமைப்பில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியை ஈரான் அழித்துள்ளது.
இந்த தாக்குதல்களை தொடர்ந்து எல்பிஜி கேஸ் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தியதாக கத்தார் அறிவித்துள்ளது. உலகின் திரவ இயற்கை எரிவாயுவில் ஏறக்குறைய 20% வழங்கும் கத்தார், தற்போது ஒரு பேரழிவுகரமான நீண்டகால தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது.
கத்தார் தனது முந்தைய ஏற்றுமதி நிலைகளுக்கு முழுமையாக திரும்புவதற்கு ஐந்தாண்டுகள் ஆகலாம் என தொழில்துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த அளவிலான இழப்பை ஈடுகட்ட, உலகச் சந்தையில் தற்போது உபரி உற்பத்தித் திறன் எதுவும் இல்லை எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது வரும் ஆண்டுகளில் உலகளாவிய எரிசக்தி விலைகளை வரலாறு காணாத உச்சத்தில் வைத்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
















