சேலம் மாநகரில் திடீரென பெய்த கனமழையை பயன்படுத்தி, திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் தடையின்றி திறந்து விடப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் திருமணிமுத்தாறு, கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த கடும் வெயில் காரணமாக வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில், திடீரென சேலம் மாநகரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கருங்கல்பட்டி, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில சாயப்பட்டறை உரிமையாளர்கள், தாங்கள் தேக்கி வைத்திருந்த சாயக்கழிவுகளை அதிகாலை நேரத்தில் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர் .
மழைநீருடன் சாயக்கழிவுகள் கலந்து திருமணிமுத்தாறில் நுரை பொங்கியபடி நீர் ஓடுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
















