துரந்தர் படம் எதிரொலியாக, பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களை அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
கந்தகார் விமான கடத்தல், டெல்லி நாடாளுமன்ற தாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள துரந்தர் திரைப்படத்தில்,
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க ஹம்சா என்ற பெயரில் உளவாளியாக அந்நாட்டிற்குள் நுழையும் ரன்வீர் சிங், இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை கண்டுபிடித்து பதிலடி கொடுப்பார்.
துரந்தர் படத்தில் முதல் பாகம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகமும் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரிக் குவிக்கிறது.
இந்த படத்தின் எதிரொலியால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான் அதிகாரிகள், அங்கு யாசகம் எடுப்போரை தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
யாசகம் எடுப்போர் பெயர், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களையும், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் பரிசோதித்து, அவர்கள் உண்மையான பிச்சைக்காரர்களா அல்லது உளவாளிகளா என, போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தி வருகின்றனர்.
















