திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மயானப்பாதையை தனிநபர் ஆக்கிரமித்ததைக் கண்டித்து கூடாரம் அமைத்து மக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் 10க்கும் விவசாயிகள் தங்களது நிலங்களை பொது பயன்பாட்டிற்காக கொடுத்த நிலையில் அந்த நிலத்தை ரமேஷ் என்பவர் ஆக்கிரமித்து சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மயானத்திற்கு செல்லும் வழி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ள கிராம மக்கள், இறுதி சடங்கு செய்ய செல்லும்போது பாதையின்றி தவிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இந்த பாதையை மீண்டும் பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
















