தமிழ்நாடு சட்டப்பேரவைதேர்தலில் 8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என தமிழக தலைமை அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைதேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 காலை 11 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி பிற்பகல் 3 மணியுடன் முடிவடைகிறது.
இதில் மார்ச் 31, ஏப்ரல் 1,3,5 ஆகிய தேதிகள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் மார்ச் 30, ஏப்ரல் 2,4,6 ஆகிய 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என தமிழக தலைமை அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
















