ஈரானில் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமென அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீது 5 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது என அண்மையில் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இந்த தாக்குதல் நிறுத்தம் மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
















