திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் சிறுவர்களை அழைத்து நாம் தமிழர் கட்சியின் தெருமுனை கூட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் கயிலை ராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் நிலக்கோட்டை தொகுதியில் பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மற்றும் கொள்கை விளக்க தெருமுனை கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அழகம்பட்டியில் நடந்த தெருமுனை கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















