மேற்கு ஆசிய போர் சூழலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நாடு வெற்றிகரமாக கடக்கும் என பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, இந்தியாவின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது இந்த இக்கட்டான சூழலை நாடு வெற்றிகரமாக கடக்கும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக நிலைத் தன்மையை உறுதி செய்வதுடன், எரிசக்தி பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொழில்துறை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அதேபோல் அத்தியாவாசிய பொருட்களை பதுக்குவது மற்றும் அதிக லாபம் ஈட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் உத்தரவிட்டார். மேலும் டீம் இந்தியா என்ற உணர்வோடு இணைந்து செயல்பட வேண்டுமென்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
















