2021 சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லையில் பரப்புரை மேற்கொண்ட அவர், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதி என்ன ஆனது..? என கேள்வி எழுப்பினார். மக்களை ஏமாற்றவே 517 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளதாக அவர் கூறினார்.
முதலமைச்சருக்கு பேனா; துணை முதலமைச்சருக்கு கார் பந்தயம் என்றும் அவர் விமர்சித்தார்.
அனைத்து மாநகராட்சி வரி வருவாயில் முறைகேடு நடைபெற்றுள்ளதகாவும், ஆடு, மாடு என அனைத்திற்கும் வரி போட்டது திமுக ஆட்சி என்றும் அவர் சாடினார்.
















