தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகுமென தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகுமென தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக இன்று சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,
பாஜகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், திமுக ஆட்சியின் ஊழல் மற்றும் முறைகேடு குறித்த குற்றப் பத்திரிகையையும் பியூஷ் கோயல் வெளியிடவுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை மத்திய அமைச்சர் அமித்ஷா அண்மையில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
















