திருவள்ளூர் மாவட்டம் கண்ணிகைபேர் அருகே ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணாபுரம் கண்டிகை பகுதியில் ஆர்ஷவித்யா சமாஜத்தின் புதிய செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவில் தர்மரக்ஷண சமிதி மாநில பொது செயலாளரும் அறங்காவலருமான கணபதி கலந்து கொண்டார்.
தொடர்ந்து அவர் குத்துவிளக்கு ஏற்றி மையத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவிற்கு ஆர்ஷவித்யா சமாஜத்தின் இயக்குநர் ஆச்சார்யா கே.ஆர்.மனோஜ் தலைமை தாங்கினார்.
மேலும் இதில் தர்மரக்ஷண சமிதி அறங்காவலர் மற்றும் பயிற்சி பொறுப்பாளர் பாண்டியன், பிரபாகரன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
















