பாஜக வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 27 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் பாஜகவின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தேர்தலில் யாரையெல்லாம் களமிறக்குவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
















