24 மணி நேரத்தில் ஏவுதலுக்கு தயாராகும் தொழில்நுட்பம் ரெடி ; "அகஸ்தியா-1" மூலம் தனியார் விண்வெளித் துறையில் புரட்சி - சிறப்பு தொகுப்பு !
Oct 17, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

24 மணி நேரத்தில் ஏவுதலுக்கு தயாராகும் தொழில்நுட்பம் ரெடி ; “அகஸ்தியா-1” மூலம் தனியார் விண்வெளித் துறையில் புரட்சி – சிறப்பு தொகுப்பு !

Manikandan by Manikandan
Mar 31, 2026, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகளால் தொடங்கப்பட்ட Bharath Space Vehicle நிறுவனம், அகஸ்தியா-1 ராக்கெட்டை பயன்படுத்தி 24 மணி நேரத்திற்குள் ஏவுதலுக்கு தயாராகும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த முயற்சி இந்தியாவின் தனியார் விண்வெளி துறைக்கு புதிய முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் சிறிய செயற்கைக்கோள் சந்தையில், இந்தியா தனது பங்கைக் அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில், குறைந்த செலவில், விரைவான மற்றும் நம்பகமான ஏவுதள சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் பேரிடர் கண்காணிப்பு துறைகளில் உடனடி செயற்கைக்கோள் ஏவுதல் அவசியமாகி வருவதால், தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெறுகிறது. இப்படியான மாற்றங்களுக்கிடையே, புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகளுடன் இந்தியாவின் சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.

அந்த வகையில், சூரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Bharath Space Vehicle நிறுவனம், தனியார் விண்வெளி துறையில் கவனம் ஈர்த்து வருகிறது. 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இஸ்ரோவில் 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட விஞ்ஞானிகள் குழுவால் இயக்கப்படுகிறது. இந்த நிறுவனம் தற்போது “அகஸ்தியா-1” என்ற 28 மீட்டர் உயரமுள்ள இரு நிலை ராக்கெட்டை உருவாக்கி வருகிறது. இதில், LOX/RP-1 எனப்படும் திரவ ஆக்சிஜன் மற்றும் கெரோசின் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் சுமார் 500 கிலோ எடையுடைய செயற்கைக்கோள்களை Sun-synchronous polar orbit-க்கு கொண்டு செல்லும் திறன் கொண்டது. மேலும், இதனால் 400 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள Low Earth Orbit-க்கு சுமார் 800 கிலோ வரை ஏற்றிச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, SSLV போன்ற சிறிய ராக்கெட்டுகள் திட எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. ஆனால், Bharath Space Vehicle திரவ எரிபொருளைத் தேர்வு செய்துள்ளது. இதன் மூலம், ஏவுதலுக்கு முன் முழுமையான சோதனைகள் நடத்த முடியும். இரண்டாம் நிலை இயந்திரத்தை 10 முதல் 40 விநாடிகள் வரை ‘Hot-fire’ சோதனை செய்யலாம். முதல் நிலை இயந்திரத்தையும் ஏவுதலுக்கு முன் சில விநாடிகள் சோதிக்க முடியும். இதனால், ஏவுதலின்போது தோல்வி ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மேலும், 24 மணி நேர முன்னறிவிப்பில் ராக்கெட்டை ஏவுவதற்கான தயார்நிலையை அடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக இருக்கும்.

இந்த திட்டத்தில் இஸ்ரோவின் முன்னாள் LPSC இயக்குநரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான என். வேதாச்சலம் முக்கிய பங்காற்றியுள்ளார். அவருடன், SLV-3 திட்டத்தில் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் பணியாற்றிய தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.வி. ஷர்மா மற்றும் தலைமை நிதி அதிகாரி பவின் பட்டேல் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இதற்கிடையில், குஜராத்தின் கோடிநார் பகுதியில் புதிய ஏவுதளம் அமைக்கும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. கடற்கரை அருகில் அமைந்துள்ள இந்த இடம் ஏவுதலுக்கு ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், மேற்குக் கடற்கரை பகுதியில் இந்தியாவுக்கு முதல் செயற்கைக்கோள் ஏவுதளம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

2023-ம் ஆண்டின் புதிய விண்வெளி கொள்கையின் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு திறக்கப்பட்ட நிலையில், Bharath Space Vehicle, Skyroot Aerospace மற்றும் Agnikul Cosmos போன்ற நிறுவனங்கள் குறைந்த செலவில் ஏவுதலை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில், இஸ்ரோ அனுபவம் கொண்ட விஞ்ஞானிகள் தொடங்கிய இந்த முயற்சி, இந்தியாவின் விண்வெளி பயணத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Tags: Private Space Industry IndiaIndian Space StartupsBharath Space VehicleISRO scientistsSpace Innovation IndiaIndian Space Policy 2023Agastya 1 Rocket
Share
Tweet
SendShare
Previous Post

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் மையக்குழு கூட்டம்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies