ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸை வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 39 ரன்களும், ஜோஸ் பட்லர் 38 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து 163 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் 19.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி, 165 ரன்கள் அடித்தது. இதன் மூலம் குஜராத் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
















