முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
Apr 1, 2026, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 1, 2026, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடந்த 23ம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரம் இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அதிகாலை முதலே மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றவும், முருகனின் அருளைப் பெறவும் பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி ஏந்தி, “அரோகரா” கோஷத்துடன் திருப்பரங்குன்றம் மலை சுற்றி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். .

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் காப்பு கட்டி விரதமிருந்து ஏராளமான பக்தர்கள் பறவை காவடி, புஷ்ப காவடி, வேல் காவடி எடுத்து வழிபட்டனர். மேலும், பக்தி கோஷங்கள் முழங்க பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் பரிமளரெங்கநாதர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியையொட்டி பரிமளரெங்கநாதர் திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா என்ற பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள மதுரை காளியம்மன் கோயிலில் நடைபெற்ற திருத்தேர் தலை அலங்காரம் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொட்டியத்தில் உள்ள புகழ்பெற்ற மதுரை காளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரை கட்டமைக்கும் திருத்தேர் ‘தலை அலங்காரம்’ நடைபெற்றது.

அப்போது, சாரம் அமைத்து தேரின் தலைப்பகுதியை மேலே கொண்டு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷம் எழுப்பினர். நாளை மாலை திருத்தேர் புறப்பாடு நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: Subramaniya Swamy Temple iThiruparankundram temple.arupadai veeduPanguni Uthiram
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் கடிதம்!

Next Post

விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு!

Related News

5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை – முன்னாள் அமைச்சர் தங்கமணி

விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு!

தமிழகத்தில் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் கடிதம்!

எதிர்ப்பு வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றி பெற வைப்பதே தவெகவின் நோக்கம் – எஸ்.பி. வேலுமணி

முசிறி அருகே திமுக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் பறிமுதல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

ஈரான் உடனான போர் 2 அல்லது 3 வாரங்களில் முடிவுக்கு வரலாம் – ட்ரம்ப் நம்பிக்கை!

விருதுநகர் தொகுதி திமுக கூட்டணி தேர்தல் ஆலோசனை கூட்டம் – தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வராததால் பரபரப்பு!

ஸ்டாலின் அரசால் முடக்கப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் மீண்டும் செயல்படுத்தப்படும் – இபிஎஸ்

சீட்டுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை பேரம் – தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை கிழித்து எறிந்த ராகுல் காந்தி!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 203 உயர்வு!

அனைத்து தரப்பினரையும் போராடும் நிலைக்கு தள்ளிய திமுக அரசு – தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு!

நாடு முழுவதும் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது ‘இ – 20 பெட்ரோல்!

சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டம் – பெண்கள் மீது மதுபாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

1,60,000 கோடி செலவில் செமிகண்டக்டர் உற்பத்தி பணிகள் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies