ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸை வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.4 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதையடுத்து 142 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த டெல்லி அணி, 17.1 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 70 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.
















