ராணிப்பேட்டை மாவட்ட எல்லை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் காரை போலீசார் சோதனை செய்யாமல் அனுப்பி வைத்தது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராணிப்பேட்டை – சித்தூர் சாலை, வசூர் சோதனைசாவடி வழியாக துரைமுருகன் தனது காரில் கட்சிக்கொடியுடன் வந்துள்ளார்.
அவருடன் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் இருந்தார். இந்நிலையில், சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், காரின் அருகே சென்று துரைமுருகனை பார்த்து வணக்கம் வைத்து, காரை சோதனை செய்யாமல் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு ஒரு நியாயம், முக்கிய கட்சியின் பிரமுகருக்கு ஒரு நியாயமா? – போலீசார் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
















