தமிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக IJK தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் NDA சார்பில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசனை ஆதரித்து, பம்மல் பகுதியில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த IJK தலைவர் ரவி பச்சமுத்து, பல்லாவரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் மற்றும் மினி பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
















