மத்திய அரசின் நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்ட அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டதாக, மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக அரசால் வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்ட அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் முழுமையாக செயல்படுத்தப்படும் என கூறினார்.
















