நடிகர் விஜய், திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் முத்தமிழ் மன்றத்தில் நடைபெற்றது.
இதில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகப்படுத்தி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், தமிழ்நாட்டில் நடக்கும் இந்தத் தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல எனவும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகும் தேர்தல் என குறிப்பிட்டார்.
ஒரு குடும்பம் தமிழகத்தை சீரழித்து வருவதாகவும், மக்களின் உணர்வுகளை திமுகவினர் மதிப்பதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், நடிகர் விஜய்யும் திமுகவும் மறைமுகக் கூட்டணி வைத்திருப்பதாகவும், திமுகவின் தோல்வி உறுதி என்பதால், அவர்களுக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதற்காகவே
தவெக-வை அவர்கள் களமிறக்கி இருப்பதாகவும் கூறினார்.
















