புதுச்சேரி, கேரளம், அசாமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மொத்தம் 294 வேட்பாளர்கள் களம்காணும் நிலையில் 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் வாக்கு செலுத்த உள்ளனர். இதற்காக ஆயிரத்து 99 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. . மொத்தமுள்ள 30 ஆயிரத்து 471 வாக்கு சாவடிகளில் 2 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. கேரள மாநிலம் முழுவதும் 76 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் சுமார் இரண்டரை கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். மாநிலம் முழுவதும் 31 ஆயிரத்து 486 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறறு வருகிறது.
புதுச்சேரி, கேரளம், அசாமில்பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
















