கோவையில் செந்தில்பாலாஜி தோற்கடிக்கப்படுவார் என்றும், திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர், கோவை திமுகவை செந்தில்பாலாஜி குத்தகைக்கு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
கரூரிலிருந்து ஆட்களை இறக்கி செந்தில்பாலாஜி பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், அதிமுக வேட்பாளர்கள் கண்ணியமாக பரப்புரை செய்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
புதுச்சேரியில் திமுக என்ற வார்த்தையையோ, ஸ்டாலின் என்ற வார்த்தையையோ ராகுல்காந்தி பயன்படுத்தவில்லை என்றும், திமுகவுடனான மோதல் போக்கால் தமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரம் செய்வது சந்தேகமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலில் திமுக ஜெயிப்பதில் ராகுல்காந்திக்கே விருப்பமில்லை என்றும், தேர்தல் ஆணையம் நடுநிலையோடு அனைவருக்கும் பிரசாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
















