590 தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 70 வாக்குறுதிகளை மட்டுமே ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அவிநாசி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல்.முருகனை ஆதரித்து, பிரசாரம் மேற்கொண்ட அவர், கல்விக்கடன் ரத்து சிலிண்டர் மானியம், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனம் உள்ளிட்ட வாக்குறுதியின் நிலை என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.
3 50,000 பேருக்கு பணி வழங்கப்படும் கூறிய திமுக, 94000 பேருக்கு மட்டுமே பணி வழங்கியதாக தெரிவித்தார். 1,05,000 பேர் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடங்களை கூட பூர்த்தி செய்யவில்லை என்றும் அவர் சாடினார்.
















