சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளதால், வாடிக்கையாளர்கள் தேவையின்றி முன்பதிவு செய்வதை கைவிட வேண்டுமென எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
இது தொடர்பாக அத்துறையின் தமிழக, புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் அசோகன் வெளியிட்ட செய்தி குறிப்பில்,) தமிழகம் முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் வினியோகம், எந்தவித தடையும் இல்லாமல் முறையாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் சார்பில், கேஸ் சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், இதன்காரணமாக வழக்கமான சுழற்சி முறையில் எந்தவித சிரமமும் இல்லாமல் சிலிண்டர்களை விநியோகிக்க முடிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே தட்டுப்பாடு என்ற பொய்யான தகவலை நம்பி முன்கூட்டியே சிலிண்டர்களை பதிவு செய்வதை வாடிக்கையாளர்கள் கைவிட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
















