தமிழகத்தில் என்டிஏ கூட்டணியின் வெற்றியின் மூலமாக நமது அன்பை காட்ட வேண்டும் என கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனையால் உடல் நலம் தேறி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஓரிரு நாட்களில் நேரில் சந்திக்க வருகிறேன் என்றும், தேர்தல் பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் கலந்துரையாடலில் Namo App மூலம் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு என்டிஏ கூட்டணியின் வெற்றியின் மூலமாக நமது அன்பை காட்ட வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
















