சென்னையில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அதிகாலை நேரில் ஆய்வு செய்தார்.
திரு.வி.க. நகர் மண்டலத்தில் உள்ள வீனஸ் நகர் நீரேற்று அறையை ஆய்வு செய்த அமைச்சர் அருண்ராஜ், மாற்று மோட்டார் பம்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பெரம்பூர் சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மோட்டார் பம்புகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அவர், மழைநீர் தேங்குவதற்கு முன்பே பம்புகளை இயக்கி, தண்ணீரை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார்.
மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர். கௌஷிக் உடனிருந்தார்.
















