குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை என, நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தேசிய செட்டியார்கள் பேரவை என்ற அமைப்பை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெகநாத் மிஸ்ரா நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர், நமது மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியினை தொடங்கியுள்ளார்.
இதற்கான அறிவிப்பை மதுரையில் அவர் வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கட்சியின் தொடக்க விழா செப்டம்பர் 26ஆம் தேதி மதுரையில் நடைபெறுவதாக தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை என்றும் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தார்.