பாகிஸ்தானின் F16 போர் விமானங்களை நவீனமயமாக்க சுமார் 5,700 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ராணுவ ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆப்ரேஷன் சிந்துாரில் பாகிஸ்தான் பலத்த சேதங்களை சந்தித்தது உறுதியாகியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. இந்தியாவின் அதிரடி தாக்குதல்களைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் போரை நிறுத்துமாறு கெஞ்சியது. இதனைத் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரில் F -16 போர் விமானங்கள் மட்டுமின்றி பாகிஸ்தானின் ரேடார் மையங்கள், தகவல் கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையங்கள்,ஓடு தளங்கள் மற்றும் விமான ஹேங்கர்கள் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டன.
ஆப்ரேஷன் சிந்தூரில் அமெரிக்காவின் F -16 மற்றும் சி-130 விமானத்துடன் சீனாவில் தயாரிக்கப்பட்ட JF 17 ரக போர் விமானம், Airborne Early Warning and Control போர் விமானம் உள்ளிட்ட பாகிஸ்தானின் பல போர் விமானங்கள் மற்றும் விமானப்படை தளங்களும் இந்தியாவால் தாக்கி அழிக்கப் பட்டது. பாகிஸ்தானின் F -16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படைத் தலைவர் AP சிங் உறுதி படுத்திய நிலையிலும், பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது. மாறாக ஆறு இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தியாவின் ரஃபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் இராணுவம் பொய் பிரச்சாரம் செய்தது. இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படைக்கு ஆப்ரேஷன் சிந்தூர் கடும் சேதத்தை ஏற்படுத்தியதை பாகிஸ்தானும் அமெரிக்காவும் அப்பட்டமாகவே ஒப்புக் கொண்டுள்ளன. பாகிஸ்தானின் F-16 போர் விமானங்களுக்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் பழுதுபார்ப்பு ஆகியவற்றுக்காகச் சுமார் சுமார் ₹5,700 கோடி ரூபாய் வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பான கடிதம் அமெரிக்கப் பாதுகாப்புக் கூட்டுறவு நிறுவனம் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. F-16 போர் விமானங்களுக்கு மிகவும் தேவையான ஆயுத-ஒருங்கிணைப்பு அமைப்புகளை மறுசீரமைக்கவும் மறுசான்றளிக்க தேவையான வன்பொருள் ஆகியவற்றையும் பழுது பார்க்கவும், avionics modules, crypto gear, மற்றும் Operational Flight Program களை மேம்படுத்தவும், ஏவியோனிக்ஸ், பயிற்சித் திட்டங்கள் மற்றும் முழு தளவாட ஆதரவு ஆகியவையும் இந்தத் தொகுப்பில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் F -16 போர் விமானங்களின் ஆயுட்காலத்தை 2040 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கும் என்று தெரிவித்துள்ள அமெரிக்கப் பாதுகாப்புக் கூட்டுறவு நிறுவனம், பாகிஸ்தானுக்கான இந்த ஒப்பந்தம் எந்தவகையிலும், பிராந்திய அமைதியை பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஆப்ரேஷன் சிந்துாரால் பாகிஸ்தான் பலத்த சேதத்தைச் சந்தித்திருப்பது அம்பலமாகியிருப்பதுடன், சேதமடைந்த ரேடார்கள், கண்காணிப்பு கருவிகள், தகவல் தொடர்பு மையங்கள், போர் விமானங்கள் ஆகியவற்றை உடனடியாகச் சீரமைக்கக வேண்டிய தேவையிருக்கிறது என்பது அமெரிக்கா வழங்கியுள்ள நிதியுதவி மற்றும் தொழில்நுட்பம் உதவிகள் மூலம் தெரியவந்துள்ளாக ராணுவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆப்ரேஷன் சிந்தூருக்கு முன்னதாகவே, பாகிஸ்தானின் F -16 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய வரலாறு இந்திய விமானப்படைக்கு உண்டு. 2019ம் ஆண்டு, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி தாக்குதல் நடத்திய இந்தியா , ஜம்முகாஷ்மீரில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
















