நெல்லையில் முதல்வருக்கு குறுக்காக நாய் கடந்து சென்ற சம்பவம், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
நெல்லைக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் யூனியன் சேர்மன் தங்கப்பாண்டியனின் உருவப் படத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது, அவரை குறுக்கிட்டு நாய் ஒன்று கடந்து சென்றது.
இதனால் ஒருவிநாடி அங்கேயே முதல்வர் ஸ்டாலின் உறைந்து நின்றார். நாடு முழுவதும் பொதுமக்களுக்கு நாய்கள் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், முதல்வருக்கு குறுக்கே நாய் சென்றது அவரது பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
















